வணிகவரி, பதிவுத்துறை ரூ.361 கோடியில் கணினிமயம்: அமைச்சர் ரமணா
வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளை ரூ.361 கோடியில் கணினி மயமாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என வணிகவரித்துறை அமைச்சர் பிவி.ரமணா தெரிவித்துள்ளார்.


வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளை ரூ.361 கோடியில் கணினி மயமாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என வணிகவரித்துறை அமைச்சர் பிவி.ரமணா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஆர்.எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 213 விலையில்லா லேப்டாப்களையும், 251 சைக்கிள்களையும் இன்று மாணவ, மாணவியருக்கு வழங்கி அமைச்சர் ரமணா பேசியது:
முதல்வரின் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் கீழ் விலையில்லா லேப்டாப்கள், சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 85 சதவீதம் மாணவ, மாணவியர் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்காக தான் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வித்துறைக்கு என ரூ.14500 கோடி ஒதுக்கி உள்ளார். நமது நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாணவ, மாணவியருக்கு லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
வணிக வரி, பதிவுத்துறைகளை பணிகள் செம்மையாக நடைபெறும் வகையில் கணினிமயமாக்க ரூ.361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மனித நேய மையம் விரைவில் தொடங்கப்படும். இதன் மூலம் இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெற முடியும். அரசின் நலத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ரமணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...