ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோட்டில் காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு வீரப்பச்சத்திரம் பகுதியில் காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :19 அக்டோபர் 2012, 9:31 am

ஜபலின் ஜான்

ஈரோடு வீரப்பச்சத்திரம் பகுதியில் காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு வீரப்பச்சத்திரம் பாரதி தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு குடி வந்த மணிமாறன் - ரத்திகா தம்பதி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மணிமாறன் (29), கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ரத்திகா (23) ஆகியோர் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 மாதத்துக்கு முன்பு தான் ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை இருவரும் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.