அதிகபட்சம் மணிமுத்தாறு அணையில் 166.6 மி.மீ மழை
பெய்துள்ளது. இதை தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்
ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அம்பாசமுத்திரத்தில் 54.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 71 மி.மீ
மழையும் பதிவாகியிருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையினால்
அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1766.62 கனஅடியும்,
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 179 கனஅடியும், கடனாநதி அணைக்கு
விநாடிக்கு 136.41 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 13 கனஅடியும்
நீர்வரத்து இருந்தது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு கணிசமாக நீர்வரத்து
வந்து கொண்டிருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3.20 அடி உயர்ந்து 41.30 அடியாகவும்,
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 60.84 அடியாகவும், கடனாநதி
அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 56.00 அடியாகவும், ராமநதி அணையின்
நீர்மட்டம் 69.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 44.83
அடியாகவும் இருந்தது.
பள்ளிக் கட்டடம் இடிந்தது: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,
ஆழ்வார்குறிச்சி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை
பெய்தது. இதில் ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூரில் பிரதான சாலையில் உள்ள
மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறையின் மேற்க்கூரை இடிந்து
சேதமடைந்தது.
கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் சொசைட்டி தெருவில் பழமையான அரச மரம் சாய்ந்ததில் சாலையோரம் நின்ற மின்கம்பம் முறிந்தது. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.