வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மணிமுத்தாறு அணையில் அதிகபட்சம் 166.6 மி.மீ மழை: அருவியில் வெள்ளம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையினால் ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும், கடனாநதி அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்தது.மணிமுத்தாறு அணையில் அதிகபட்சம் 166.6 மி.மீ மழை பெய்ததால் அருவியில்வெள்ளம் ஏற்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2012, 5:28 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்புபகுதியில் பெய்த பலத்த மழையினால் ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும், கடனாநதி அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்தது.
மணிமுத்தாறு அணையில் அதிகபட்சம் 166.6 மி.மீ மழை பெய்ததால் அருவியில்
வெள்ளம் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில்
பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின்
நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து
அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 90 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 85 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 55 மி.மீ மழையும், கடனாநதி  அணையில் 20 மி.மீ மழையும், ராமநதி அணையில் 10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அருவியில் வெள்ளம்:

அதிகபட்சம் மணிமுத்தாறு அணையில் 166.6 மி.மீ மழை
பெய்துள்ளது. இதை தொடர்ந்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்
ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அம்பாசமுத்திரத்தில் 54.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 71 மி.மீ
மழையும் பதிவாகியிருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையினால்
அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1766.62 கனஅடியும்,
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 179 கனஅடியும், கடனாநதி அணைக்கு
விநாடிக்கு 136.41 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 13 கனஅடியும்
நீர்வரத்து இருந்தது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு கணிசமாக நீர்வரத்து
வந்து கொண்டிருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3.20 அடி உயர்ந்து 41.30 அடியாகவும்,
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 60.84 அடியாகவும், கடனாநதி
அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 56.00 அடியாகவும், ராமநதி அணையின்
நீர்மட்டம் 69.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 44.83
அடியாகவும் இருந்தது.

பள்ளிக் கட்டடம் இடிந்தது: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி,
ஆழ்வார்குறிச்சி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை
பெய்தது. இதில் ஆழ்வார்குறிச்சி அருகே கீழஆம்பூரில் பிரதான சாலையில் உள்ள
மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறையின் மேற்க்கூரை இடிந்து
சேதமடைந்தது.

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் சொசைட்டி தெருவில் பழமையான அரச மரம் சாய்ந்ததில் சாலையோரம் நின்ற மின்கம்பம் முறிந்தது. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.