வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முக்கூடலில் உதவி ஆய்வாளர், காவலருக்கு வெட்டு, பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் சனிக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர், காவலரை

News image
Updated On :27 அக்டோபர் 2012, 5:24 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில்சனிக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர், காவலரைவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி
வருகின்றனர்.

முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் செல்வம். காவலர் முருகன். இருவரும் பஸ்
நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்களைசோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்தனராம்.
பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்வமும், காவலர் முருகனும் மோட்டார்
சைக்கிளை நிறுத்துமாறு தெரிவித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் கையில் வாளால் உதவி
ஆய்வாளர் செல்வம், காவலர் முருகனை வெட்டினராம். போக்குவரத்து நிறைந்த பஸ்நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களை வெட்டிய சம்பவம் பரபரப்பு
ஏற்படுத்தியது.

வெட்டுபட்ட உதவி ஆய்வாளர் செல்வமும், காவலர் முருகனுக்கும் விரட்டி
சென்று ஒருவரை பிடித்தனர். பிடிபட்டவர் வீரவநல்லூர் அருகே உள்ள
மானபறநல்லூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் ராஜகோபால் (28) என்பது
தெரியவந்தது. பிடிபட்ட ராஜகோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

வெட்டுப்பட்டதில் உதவி ஆய்வாளர் செல்வத்திற்கு வலது கையில் காயம்
ஏற்பட்டது. காவலர் முருகனுக்கு வலது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.
இருவருக்கும் முக்கூடலில் முதலுதவி அளிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முக்கூடல் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜகோபாலை கைது செய்தனர். தப்பி
ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.