வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விக்கிரமசிங்கபுரத்தில் பாஜக மறியல்: 66 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளநிலத்தை மீட்க வலியுறுத்தி

News image
Updated On :29 அக்டோபர் 2012, 3:27 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள
நிலத்தை மீட்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 10
பெண்கள் உள்பட 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளி
நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த நிலத்தை மீட்க வலியுறுத்தி
பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் திங்கள்கிழமை
விக்கிரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மறியல் போராட்டம்
நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர்
இருதயராஜ் தலைமை வகி்த்தார். சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவர்
முனவரிபேகம், கட்சியின் அறநிலையபிரிவு மாநிலத் தலைவர் சிதம்பரம்,
கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் எஸ்.வி. அன்புராஜ், சிறுபான்மை அணி
மாநிலத் துணைத் தலைவர் இரா. சைமன் மற்றும் 10 பெண்கள் உள்பட 66 பேரை
போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.