ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்துடன் நல்லுறவைப் பேணவே விருப்பம் : எடியூரப்பா

மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் கடுமையான கஷ்டத்தில் உள்ளனர். அதனால்தான் தமிழகத்துக்கு தண்ணீர் ....

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:23 am

தங்கராஜா

சேலம், செப்., 13 : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பர் சேலம் வந்துள்ளார். சேலத்தில் ஏற்காடு அடிவாரத்தில் செட்டிக்காவடி என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சேலம் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அவர் நேரில் பார்வையிட்டார். கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அரவிந்த் லிங்பாவலி, 5 கர்நாடக பாஜக எம்எல்ஏக்களும் அவருடன் வந்து ஆய்வு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, 1971க்குப் பிறகு கர்நாடகாவில் மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் கடுமையான கஷ்டத்தில் உள்ளனர். அதனால்தான் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை. எனினும், தற்போது உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரியில் 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி புது தில்லியில் காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

பொதுவாக கர்நாடக மாநில மக்கள், அண்டை மாநிலங்களுடன் சகோதரத்துவத்துடன் பழகவே விரும்புகிறோம். அதிலும் குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவைப் பேணவே விருப்பம். ஆனால் காவிரியில் போதிய நீர் எங்களுக்கு இல்லை. அதனால்தான் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க இயலவில்லை. எங்க நிலைமையை புரிந்து கொண்டு தமிழ மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கும் போது எல்லாம், உள்ளூர் விவசாயிகளும், அமைப்புகளும், கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது இயல்பான ஒன்றுதான். அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.