ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

இன்று முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 4,000 கன அடி திறந்துவிடப்படுகிறது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணை இன்று....

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:27 am

தங்கராஜா

சேலம், செப்., 17 : டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இன்று இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இன்று பகல் 12.20 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கேவி. ராமலிங்கம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் மதகுகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்துறை அமைச்சர் தங்கமணி, நெடுஞ்சாலை மற்றும் சிவில் துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் எம்பி செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 4,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.

சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மேட்டூர்  அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் நீர்மின் நிலையத்தில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பது கூடுதல் தகவலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.