இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விண்ணப்பம் கோரி கூட்டுறவு வங்கி முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி, செப்., 17 : பண்ருட்டியை அடுத்து அங்குச்செட்டி பளையம் கூட்டுறவு வங்கி முன்பு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க கோரி பண்ருட்டி ஒன்றிய திமுகவினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:27 am

சீனிவாசன்

பண்ருட்டி, செப்., 17 : பண்ருட்டியை அடுத்து அங்குச்செட்டி பளையம் கூட்டுறவு வங்கி முன்பு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்க கோரி பண்ருட்டி ஒன்றிய திமுகவினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் தலைமையில் இன்று காலை முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூட்டுறவு சங்கத்துக்கான புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படுதில் பல பகுதிகளில் முறையான தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும், விண்ணப்பங்கள் அதிமுக உறுப்பினர்களுக்கு மட்டும் கொடுப்பதாகவும் பல இடங்களில் புகார் வந்துள்ளது.

விவசாய சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள், கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக சேர விண்ணப்பம் கோரினால், கூட்டுறவு வங்கியின் செயலர்  விண்ணப்பம் வழங்குவதற்கான கடைசி தேதி 12ம் தேதியுடன் முடிந்துவிட்டதாகக் கூறி விண்ணப்பங்களை வழங்க மறுக்கிறார்.

இது குறித்து எழுதிக் கொடுங்கள் என்று முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு வந்த போலிஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர், கூட்டுறவு வங்கியை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.