யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் தாய் மற்றும் மகள் கொலை : நகைகள் கொள்ளை

சேலம், செப்., 26 : சேலம் செவ்வாய்பேட்டையில் நாகையர் தெருவைச் சேர்ந்தவர் ராணி (44) இவரது மகள் சங்கீதா (23) கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். ராணியின் கணவர் சேகர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:23 am

தங்கராஜா

சேலம், செப்., 26 : சேலம் செவ்வாய்பேட்டையில் நாகையர் தெருவைச் சேர்ந்தவர் ராணி (44) இவரது மகள் சங்கீதா (23) கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். ராணியின் கணவர் சேகர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சேகரின் தொழிலான நார் பட்டு செய்யும் வேலையை ராணி செய்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வீட்டுக்குள் 10 மணிக்குப் பிறகு இருவரும் மர்மாமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.  இருவரும் கழுத்தில் மின்சார வயரை வைத்து இறுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த பீரோ உடைந்து கிடந்தது. கொலையானவர்கள் அணிந்திருந்த நகைக்கள் காணவில்லை.

இதனால், நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.