அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

பலாத்காரத்துக்கு எதிரான மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

பெண்கள் மீதான பாலியல் பலாத்கார நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தும் மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :21 மார்ச் 2013, 4:50 pm IST

பெண்கள் மீதான பாலியல் பலாத்கார நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தும் மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

சிறார்களுக்கான வயது வரம்பு 18 ஆகவே இச்சட்ட மசோதாவில் நீடிக்கிறது. மேலும், பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க இந்த சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது. பெண்களுக்கான பாலியல் உறவு சம்மத வயது 18 ஆகவே நீடிக்கிறது. இதில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.

இதனை மாநிலங்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கொண்டு வந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது, மாநிலங்களவையில் பிரதமரும் இருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து கொண்டு வரப்பட்ட இந்த சட்ட திருத்த மசோதா 2 நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.