அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை : மாயாவதி காட்டம்

திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On :21 மார்ச் 2013, 2:00 pm IST

திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி இது குறித்து கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது ஆட்சியில், சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று  குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐயை தவறாகப் பயன்படுத்தி தன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால், சிபிஐயை தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயக நாட்டில் இது நல்ல வழிமுறை அல்ல, இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.