நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சேலம்: மல்லியகரை அருகே 80 வயது மூதாட்டி பாலாத்காரம் செய்தவர் கைது; மூதாட்டி கவலைக்கிடம்

தம்மம்பட்டி அருகே மல்லியகரையடுத்த கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டியை நள்ளிரவில் பலாத்காரம் செய்தவரை

Updated On :11 மே 2013, 1:54 pm IST

தம்மம்பட்டி அருகே மல்லியகரையடுத்த கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டியை நள்ளிரவில் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மல்லியகரை காவல்நிலையத்திற்குட்பட்ட கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டி செல்லம்மாள் (கணவர்  நாராயணன் இறந்துவிட்டார்) தனியே வசித்து வருகிறார்.

கோபாலபுரம் அருகே வேப்பிலைக்கொட்டை என்ற ஊரைச்சேர்ந்த குமரக்கவுண்டரின் மகன் பழனிவேல்(41) அப்பகுதியில் காய்கறி,கீரைகளை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் இருந்த பழனிவேல், வீட்டில் தனியே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி செல்லம்மாளை பலாத்காரம் செய்துள்ளார்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் செல்லம்மாள், சேலம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆத்தூர் டி.எஸ்.பி.சிவ.வேளியப்பன்,தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிந்து, பழனிவேலை இன்று கைது செய்து ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.