நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருப்பதி மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பேருந்து : பக்தர்கள் தப்பினர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. எனினும் பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

Updated On :11 மே 2013, 3:20 pm IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று மலைப்பாதையில் விபத்துக்குள்ளானது. எனினும் பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இன்று காலை 5.30 மணியளவில் ஆந்திர அரசு பேருந்து ஒன்று மலைப்பாதையில், பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். மலைப்பாதையில் இருந்து சற்று விலகி அந்தரத்தில் தொங்கியவாறு நின்ற பேருந்தில் இருந்து பக்தர்கள் காயமின்றி இறங்கி மற்றொரு பேருந்து மூலமாக கீழ் திருப்பதிக்கு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.