ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை ஆய்வு செய்தார் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளின் தரம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்து கூடுதல் கடைகள் திறக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:32 pm IST

கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும்  பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளின் தரம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்து கூடுதல் கடைகள் திறக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு, கூட்டுறவுத்துறை மூலம் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள்  தமிழக முதல்வரால் கடந்த 20.6.2013 அன்று திறக்கப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மேலும் பெருக்குவதற்கு வேண்டி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று (22.8.2013) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேரில் சென்று பண்ணைப் பசுமை கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் காய்கறிகளின் தரத்தையும், அதன் வகைகளையும், விற்பனை விலையையும் கேட்டறிந்தார்.

பின்னர் பண்ணைப் பசுமை காய்கறி கடைகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பொருத்தவரை, ராயக்கோட்டை, பாகனூர், பேரிகை, சத்திரபட்டி ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 296.709 டன் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மதிப்பு ரூ.65.41 இலட்சம் ஆகும். தற்போது காய்கறி விற்பனை அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 டன் கொள்ளளவு கொண்ட காய்கறிகள் கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் பெரும் பயனடைகின்றனர்.

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு தேவையான காய்கறிகளை விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் 10 சதவிகிதம் இடைத்தரகருக்கான கமிஷன் வழங்காததால் விவசாயிகள் பெரும் இலாபம் ஈட்டுவதுடன் போக்குவரத்து செலவினமும் விவசாயிகளுக்கு மிச்சமாகிறது.

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் 21.8.2013 வரை 1,157.988 டன் விற்பனை செய்யப்பட்டு அதன் மதிப்பு ரூ.3,07,30,801/- விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.