தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயில்வதற்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜேக்கப்பாத் பிரிட்டன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளைஞர் நலன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஆண்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை நேரு விளையாட்டு அரங்கிலும், பெண்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை உள்விளையாட்டு அரங்கிலும் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதில், கூடைபந்து, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, தடகளம் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதேபோல், கால்பந்து போட்டிக்கு பெண்கள் மட்டும் தேர்ந்து எடுக்கப்படவுள்ளனர். இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளோர் 12-வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, மாநில அளவில் குறிப்பிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணையாக இருப்பது அவசியம் ஆகும். இந்த விளையாட்டுக்கு தேர்வு செய்யப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்களில் சிறப்பு தேர்ச்சி பெற்ற சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பான பயிற்சியும், சத்தான உணவு மற்றும் தங்குவதற்கு வசதியும் இலவசமாக அரசால் செய்து கொடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பபடிவம் www.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜேக்கப்பாத் பிரிட்டன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

