கூட்டுறவு தேர்தலில் முறைகேட்டை கண்டித்து சாலைமறியல்
சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து வியாழக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சிதம்பரம் அருகே புவனகிரியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து வியாழக்கிழமை சாலைமறியல் நடைபெற்றது. இதனால் சிதம்பரம்-கடலூர் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் குறியாமங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து சுயேட்சையாக ஆயிபுரம் ஜெயச்சந்திரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை வேட்பாளர் பட்டியல் ஒட்டப்படவில்லை. இதனால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதை கண்டித்து கீழமணக்குடி, ஆயிபுரம், குறியாமங்கலம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே வியாழக்கிழமை மாலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...