விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் உழவர் பெருவிழா வருகிற 14-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து மே.20-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
விவசாயிகள் அனைவரும் நவீன சாகுபடி பற்றி அறிந்து கொள்ளவும், வேளாண்மை துறை அதிகாரிகளின் ஆலோசனை உள்ளிட்டவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்காகவும், கடந்தாண்டு முதல் மாவட்டம் தோறும் உழவர் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் குறிப்பிட்ட நாளில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இதில், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவதற்காகவே வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலர்களால் நடத்தப்படும், இதில், வேளாண்மை சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். அதோடு, விவசாயிகளுக்கு பயனுள்ள கண்காட்சி, சாதனை விவசாயியின் வெற்றிக் கதை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது.
இவ்விழா நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை, விதைச்சான்று துறை, கால்நடைத்துறை, பட்டு வளர்ச்சி்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நீர் வள ஆதாரத்துறை, கூட்டுறவு விவசாய வங்கி, முன்னோடி வங்கி, சர்க்கரை தொழிற்சாலை அலுவலர்கள், பால் கூட்டுறவு சங்கங்கள், கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகங்களின் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
இதையொட்டி, கண்காட்சி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஊர்தி ஊர்வலம் உள்ளிட்டவைகளும் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் அந்தந்த வட்டாரப் பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள். சாதனை விவசாயிகள் விளைநிலப்பகுதியில் பயிரிட்ட விவரங்கள் மற்றும் லாபம் பெற்றவை குறித்து விளக்கமாக எடுத்துக் கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், பங்கேற்கும் விவசாயிகள் அனைவருக்கும் விவசாயம் மேற்கொள்ளும் முறைகள் குறித்தும், காலநிலைக்கேற்ப விதைகளை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட விவசாயிகளின் கேள்விகள் அனைத்திற்கும் வேளாண்மை அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்படவும் இருக்கிறது. இதில், விவசாயிகளுக்கு பிற்பகல் அறுசுவை உணவு வழ்ங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை அலுவலக வட்டாரங்களில் தகவல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

