தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகிரி ஊராட்சி ஒன்றிய துணைத தலைவர் ராஜீநாராயணன். இவர் அதிமுக பிரமுகர் ஆவார். இவர் இன்று பிற்பகல் தூத்துக்குடியிலிருந்து தனது சொந்த ஊருக்கு பாளையங்கோட்டை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோரம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார் . அபோது கார் நிலைதடுமாறி கவிழ்ந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.