தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறை அருகே லாரி-அரசு பஸ் மோதல்: பெண் பலி; 23 பேர் காயம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரசு பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

News image
Updated On :9 ஏப்ரல் 2013, 4:31 am

சங்கர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அரசு பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

பழனியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆக்கூரில் இருந்து சென்ற லாரி ஒன்று, மயிலாடுதுறை அருகே மாமரத்துமேடை என்ற இடத்தில் அரசு பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியது. இன்று காலை 3.45 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவர் பலியானார். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.