தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

75 இலங்கை அகதிகள் ஜாமினில் விடுதலை

தமிழகத்தில் உல்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து 120 பேர் அனுமதியின்றி வெளியேறி நாகை  வேலாங்கன்னியிலிருந்து கடல் மார்கமாக ஒரு படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றனர். சனிகிழமை அதிகாலை படகில் ஏற்பட்ட  இயந்திர கோளாறு காரணமாக .அவர்கள் நடுக்கடலில்

News image
Updated On :10 ஏப்ரல் 2013, 12:55 pm

சங்கர்

தமிழகத்தில் உல்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து 120 பேர் அனுமதியின்றி வெளியேறி நாகை  வேளாங்கன்னியிலிருந்து கடல் மார்கமாக ஒரு படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றனர். சனிகிழமை அதிகாலை படகில் ஏற்பட்ட  இயந்திர கோளாறு காரணமாக .அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.இதையடுத்து தமிழக கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படையினர் அகதிகளை மீட்டு கரையேற்றினர் . கரையேற்றபட்ட 120 அகதிகளில் பெண்கள், சிறுவர்கள் குழந்தைகள் தவிர 75 ஆண்கள் அடங்குவர். இவர்களை கடந்த ஞாயிற்றுகிழமை நாகை குற்றவியல் நீதிதுறை நடுவர் மன்றத்தில் முன்னிலை படுத்தபட்டனர். அப்போது 75 அகதிகளையும் ஏப்.10 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாகை குற்றவியல் நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். இதன்படி 75 அகதிகளும் புழல்சிறையில அடைக்கப்பட்டனர்.

நீதிமன்ற காவல் நிறைவு நாளான இன்று மாலை 75 அகதிகளும் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு குற்றவியல் நீதிதுறை நடுவர் மன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர். அப்போது 75 பேரையும்  நீதிபதி சரஸ்வதி தனது அதிகாரத்தின் பேரில் பிணையில் விடுவிப்பதாக உத்தரவிட்டார். ஒரிரு நாட்களில் அகதிகள் அனைவரும் தங்கள் முகாம்களுக்கு அனுப்பபடுவார்கள் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.