ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலங்கைக் கடற்படை தாக்குதலில் நாகை மீனவர்கள் 4 பேர் காயம்

இலங்க‌ை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் நாகப்பட்டினம் மீனவர்கள் 4 ‌ பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 2:21 am

சங்கர்

இலங்க‌ை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் நாகப்பட்டினம் மீனவர்கள் 4 ‌ பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ‌வேதாரண்யம் வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த செல்வம், மாரியப்பன், விஜயகுமார் சவுந்திரராஜன் என 4 மீனவர்கள் ஒரு படகில் நேற்று மாலை 4 மணிக்கு கோடியக்க‌ரை அருகே மீன்பி‌டித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினர் உருட்டுக்கட்டைகளால் மீனவர்களைத் தாக்கி, இங்கே மீன்பிடிக்கக்கூடாது என்று கூறி மிரட்டினராம். பின்னர், மீண்டும் இந்தப் பகுதியில் மீன்பிடிக்க வந்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். நேற்று நள்ளிரவு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து புகார் தெரிவித்தனர். காயமடைந்த 4 மீனவர்களும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.