எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கையில்லை: வி.நாராயணசாமி

இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளே ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 10:51 am

செல்வ முத்துகுமாரசாமி

இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளே ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சத்தில் காரைக்கால் புளியங்கொட்டை சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் வி.நாராயணசாமி புதன்கிழமை மாலை கலந்து கொண்டார்.

தொடர்ந்து நெடுங்காட்டை சேர்ந்த திமுக பிரமுகர் குளக்குடிமாறன் என்பவர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் பேசியது :

காங்கிரஸ் கட்சி கட்டுக்கோப்பான, தலைவர்களை தொண்டர்கள் எளிதில் சந்திóத்துப் பேசும் தன்மைகொண்ட சுதந்திரமான கட்சி. மத்தியிலும், புதுவை மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி இருந்தது வளர்ச்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியது. காரைக்காலில் துறைமுகம், விளையாட்டு அரங்கம், ரயில் போக்குவரத்து, என்.ஐ.டி, கேந்திரிய வித்யாலயா, கோவில் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி, ஆறு பாலங்கள் புதிதாக கட்டுவது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத ரங்கசாமி ஆட்சியில், மாணவர்களுக்கு செலுத்துவதாகக் கூறிய கல்விக் கட்டணம் செலுத்தவில்லை, முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை, மீனவர்களுக்கு டீசல் மானியம் தரவில்லை, வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் பெற முயற்சியில்லை, பட்ஜெட்டில் கூறிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. மின்கட்டணம், பால், பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் புதுச்சேரி வந்தபோது, சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.165 கோடி, சில திட்டங்கள் கணினிமயமாவதற்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்தார். புதுவை முதல்வர் மத்தியில் எந்த அமைச்சரையும் சந்தித்து புதுவை வளர்ச்சிக்குத் தேவை குறித்து பேசுவதில்லை. மத்தியில் ஏரி வெட்டுவதெற்கென்றே ஒரு திட்டம் உள்ளது. உரிய துறை அமைச்சரை சந்தித்துப் பேசி, காரைக்காலில் ஏரி வெட்ட நிதியை பெற முயற்சிக்கவில்லை. மாறாக, நான் நிதி கிடைப்பதை தடுப்பதாகவும், மத்திய அரசு நிதி தருவதில்லையெனவும் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் மீது நலன் கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. தமிழக கட்சிகள் சில, இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறார்கள். மாணவர்ளை தூண்டிவிடுகிறார்கள். மத்திய அரசு இலங்கை தமிழர்கள் பகுதி மேம்பாட்டுக்கு ரூ.2500 கோடி நிதியுதவி அளித்து, ரயில் திட்டத்திற்கு நிதியுதவி உள்ளிட்ட பல சலுகைகளை செய்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாசுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது, தங்களுக்கு தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை, மத்தியில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகள் நன்மை செய்யும் என்றே நம்புவதாக இலங்கை தமிழர்கள் கூறியதாக அக்குழு தெரிவிக்கிறது.

புதுவையில் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் ஆட்சி அமைக்கமுடியாத நிலை காங்கிரஸþக்கு ஏற்பட்டுவிட்டது. வரும் தேர்தலில் நன்கு யோசித்து காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்கும். புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி தரப்படுவதில்லை. இதனால் வளர்ச்சித் திட்டங்களை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தருவதாக கூறினார் நாராயணசாமி.

நிகழ்ச்சியில் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், முன்னாள் பேரவை உறுப்பினர்கள் ஆர்.கமலக்கண்ணன், அ.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.