ஆனால் மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத ரங்கசாமி ஆட்சியில், மாணவர்களுக்கு செலுத்துவதாகக் கூறிய கல்விக் கட்டணம் செலுத்தவில்லை, முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை, மீனவர்களுக்கு டீசல் மானியம் தரவில்லை, வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் பெற முயற்சியில்லை, பட்ஜெட்டில் கூறிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. மின்கட்டணம், பால், பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் புதுச்சேரி வந்தபோது, சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.165 கோடி, சில திட்டங்கள் கணினிமயமாவதற்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்தார். புதுவை முதல்வர் மத்தியில் எந்த அமைச்சரையும் சந்தித்து புதுவை வளர்ச்சிக்குத் தேவை குறித்து பேசுவதில்லை. மத்தியில் ஏரி வெட்டுவதெற்கென்றே ஒரு திட்டம் உள்ளது. உரிய துறை அமைச்சரை சந்தித்துப் பேசி, காரைக்காலில் ஏரி வெட்ட நிதியை பெற முயற்சிக்கவில்லை. மாறாக, நான் நிதி கிடைப்பதை தடுப்பதாகவும், மத்திய அரசு நிதி தருவதில்லையெனவும் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.