92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி நிறுவ தமிழத் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் முன்னுரிமை பெறும் வகையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஒன்ற தமிழக முதல்வர் நிறுவ வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 12:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் முன்னுரிமை பெறும் வகையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஒன்ற தமிழக முதல்வர் நிறுவ வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி தலைவர் பெ.மணியரசன், பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் கூட்டாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு மகளிர் கல்லூரி திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆயினும் என்ன காரணத்தினாலோ இக்கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது. தாங்கள் பல்வேறு மாவட்டங்களில் அரசு கல்லூரிகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வரிசையில் சிதம்பரத்தில் அரசு மகளிர் கல்லூரி உடனடியாக தொடங்க அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சிதம்பரம் நகர எல்லைக்குள் ஆதிதிராவிடர் நலத்துறையில் இயங்கி வரும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அக்கல்வி நிலையங்களின் பயன்பாட்டிற்கு போக எஞ்சிய கட்டடங்களும், இடங்களும் ஏரளாமாக உள்ளன. சுவாமி சகஜானந்தர் முயற்சியால் பெரு முயற்சியால் நிறுவப்பட்ட இப்பள்ளி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், தொழில்நுட்ப பயிலகமும் நிறுவப்படும் அளவிற்கு போதுமான இடங்கள் உள்ளன.

அந்த இடத்தில் தமிழகஅரசு மகளிர் கல்லூரி ஒன்றை தொடங்கி, அதில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவியர்களுக்கு குறைந்தது 50 விழுக்காடு இடம் வழங்கும் வகையில் முன்னுரிமை வழங்கினால் கல்வியில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் உள்ள அச்சமூக மாணவியர்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழ் மொவி வளர்ச்சிக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்கு பாடுபட்ட சுவாமி சகஜானந்தர் பெயரில் இக்கல்லூரி நிறுவப்படுவது பொருத்தமுடையதாக இருக்கும் என கடிதத்தில் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.