எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கம் ஆட்சியரிடம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வலியுறுத்தும் வகையில், அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கத்தினர் காரைக்கால் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 11:30 am

செல்வ முத்துகுமாரசாமி

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க வலியுறுத்தும் வகையில், அனைத்து சமய சகோதர வாழ்வுச் சங்கத்தினர் காரைக்கால் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே இச்சங்கத்தின் சார்பில் மீனவ சகோதர மீட்புக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தியது. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தோர், இலங்கை கடற்படையினரின் செயல்பாட்டைக் கண்டித்தும், தமிழக, காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் என்.ஜி.ஆர்.வேதாசலம் தலைமை வகித்தார். காரைக்கால் மறைவட்ட பங்கு குரு அல்போன்ஸ் அடிகளார், சமாதானக்குழு உறுப்பினர் கே.தண்டாயுதபாணிபத்தர், எஸ்.கே.டி.ஆரிபு மரைக்காயர், ஓய்வு பெற்ற திட்டத்துறை இணை இயக்குநர் ஆர்.மோகன், தெய்வசகாயம் சபரிநாதன் உள்ளிட்ட பலர் மீனவர்கள் பிரச்னைகள் குறித்துப் பேசினர்.

தொடர்ந்து இச்சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். இலங்கை கடற்படையினரின் மனிதாபிமான செயல் கண்டனத்துக்குரியது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்னை ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.