வாரியர்ஸிடம் பணிந்தது சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில்


சென்னை சூப்பர் கிங்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது புணே வாரியர்ஸ்.
முதலில் பேட் செய்த புணே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. புணே வாரியர்ஸ் அணியில் கேப்டன் மேத்யூஸ், யுவராஜ் சிங் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறாதபோதும், ஆஸ்திரேலிய வீரர்களான ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அபார வெற்றி கண்டது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி, மோஹித் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அல்பி மோர்கல், அனிருத்தா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சென்னையில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் புணே வாரியர்ஸ் அணியில் கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஸ்மித் இடம்பெற்றார். ராஸ் டெய்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். யுவராஜ் சிங் காயம் காரணமாக இடம்பெறாததால், மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டார்.
ஆரோன் பிஞ்ச் அரைசதம்: டாஸ் வென்ற புணே வாரியர்ஸ் கேப்டன் ராஸ் டெய்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் புணேவின் இன்னிங்ûஸத் தொடங்கினர். டிர்க் நேன்ஸ் வீசிய முதல் ஓவரில் ஆரோன் பிஞ்ச் 3 பவுண்டரிகளை விரட்ட அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. ஒருபுறம் உத்தப்பா நிதானமாக ஆட, மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இதனால் 7-வது ஓவரில் 50 ரன்களைக் கடந்தது புணே வாரியர்ஸ்.
மோரிஸ் வீசிய 9-வது ஓவரில் பவுண்டரியை அடித்து 32 பந்துகளில் அரைசதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், ஜடேஜா வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்திலும் சிக்ஸர் அடிக்க கிரீûஸ விட்டு வெளியே வந்தபோது, தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார் ஆரோன் பிஞ்ச். அவர் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார். ஆரோன் பிஞ்ச்-ராபின் உத்தப்பா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.
ஸ்டீவன் ஸ்மித் அதிரடி: இதையடுத்து கேப்டன் ராஸ் டெய்லர் களம்புகுந்தார். அந்த அணி 101 ரன்களை எட்டியபோது 26 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா ஆட்டமிழந்தார். இதன்பிறகு டெய்லர் 8, மார்ஷ் 2 ரன்களில்
ஆட்டமிழந்தனர். அதன்பின் மணீஷ் பாண்டே களம்புகுந்தார். டிர்க் நேன்ஸ் வீசிய, ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டன.
ரிவர்ஸ்வீப் சிக்ஸர்: பிராவோ வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் ரிவர்ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து அசத்தினார் ஸ்டீவன் ஸ்மித். அந்த ஓவரின் 5-வது பந்தில் மணீஷ் பாண்டே 9 ரன்களில் போல்டு ஆனார். இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் ஸ்மித், ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.
சூப்பர் கிங்ஸ் தரப்பில் கிறிஸ் மோரிஸ், வேயன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிர்ச்சித் தொடக்கம்: 160 என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே அனிருத்தாவின் விக்கெட்டை இழந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, முரளி விஜயுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. 10 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 8 ரன்களில் ஆட்டமிழக்க, பத்ரிநாத் களம்புகுந்தார்.
6-வது ஓவரில் மிட்ஷெல் மார்ஷ் பந்தில் சிக்ஸர் அடித்த முரளி விஜய், அபிஷேக் நய்யார் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். முன்னதாக, அவர் ஒரு ரன்னில் இருந்தபோது அசோக் திண்டா பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை சுமன் கோட்டைவிட்டார். இதன்பிறகு ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார்.
பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய பத்ரிநாத், 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களம்புகுந்தார் கேப்டன் தோனி. இதனிடையே ராகுல் சர்மா ஓவரில் சிக்ஸர் அடித்த ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து பைன் லெக் திசையில் நின்ற திண்டாவிடம் கேட்ச் ஆனார். பின்னர் வந்த பிராவோ 1 ரன்னில் ஆட்டமிழக்க, அல்பி மோர்கல் களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில் மார்ஷ் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை விளாசினார். ஆனால் அடுத்த ஓவரில் தோனி ஆட்டமிழக்க, சூப்பர் கிங்ஸýக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. தோனி 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கடைசி 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த மோர்கல் பவுண்டரி எல்லையில் ஆரோன் பிஞ்சிடம் கேட்ச் ஆனார். அவர் 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இறுதியில் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆட்டநாயகன் ஸ்டீவன் ஸ்மித்
புணே அணியில் கேப்டன் மேத்யூஸýக்குப் பதிலாக ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ஸ்டீவன் ஸ்மித், 16 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்ததோடு, பீல்டிங்கிலும் அசத்தினார். சூப்பர் கிங்ஸின் முன்னணி பேட்ஸ்மேன்களான பத்ரிநாத், தோனி, பிராவோ ஆகியோரை அற்புதமாக கேட்ச் செய்த ஸ்டீவன் ஸ்மித், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஸ்கோர் போர்டு
புணே வாரியர்ஸ்
ராபின் உத்தப்பா (சி) ஜடேஜா (பி) மோரிஸ்2633
ஆரோன் பிஞ்ச்(ஸ்டம்பிட்) தோனி (பி) ஜடேஜா6745
ரோஸ் டெய்லர்(சி) ஜடேஜா (பி) மோரிஸ்813
ஸ்டீவன் ஸ்மித்நாட் அவுட் 3916
மிச்சல் மார்ஷ்(சி) மோர்கல் (பி) பிராவோ24
மணிஷ் பாண்டே(பி) பிராவோ98
அபிஷேக் நய்யார்நாட் அவுட்01
உதிரிகள்8
மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு )159
விக்கெட் வீழ்ச்சி: 1-96 (பிஞ்ச்), 2-101 (உத்தப்பா), 3-118 (டெய்லர்), 4-128 (மார்ஷ்), 5-159 (பாண்டே).
பந்து வீச்சு: டிர்க் நேன்ஸ் 4-0-42-0, ஜடேஜா 4-0-27-1,
அஸ்வின் 4-0-24-0, மோரிஸ் 4-0-25-2, பிராவோ 4-0-35-2
சென்னை சூப்பர் கிங்ஸ்
அனிருத்தாஎல்பிடபிள்யூ (பி) குமார்02
முரளி விஜய்(சி) டெய்லர் (பி) நய்யார் 24 22
சுரேஷ் ரெய்னா(சி) சுமன் (பி) குமார்810
பத்ரிநாத்(சி) ஸ்மித் (பி) மார்ஷ்3426
ஜடேஜா(சி) திண்டா (பி) மார்ஷ்2722
மகேந்திர சிங் தோனி(சி) ஸ்மித் (பி) திண்டா1013
வேயன் பிராவோ(சி) ஸ்மித் (பி) சர்மா14
அல்பி மோர்கல்(சி) பிஞ்ச் (பி) திண்டா1311
கிறிஸ் மோரிஸ்நாட் அவுட்55
அஸ்வின்நாட் அவுட்115
உதிரிகள்2
மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு )135
விக்கெட் வீழ்ச்சி: 1-0 (அனிருத்தா), 2-23 (ரெய்னா), 3-40 (விஜய்),
4-86 (பத்ரிநாத்), 5-98 (ஜடேஜா), 6-104 (பிராவோ), 1-115 (தோனி), 8-124 (மோர்கல்).
பந்து வீச்சு: புவனேஸ்வர் குமார் 4-1-12-2,
அசோக் திண்டா 4-0-34-2, மார்ஷ் 4-0-35-2,
நய்யார் 3-0-21-1, பிஞ்ச் 1-0-9-0, ராகுல் சர்மா 4-0-24-1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...