இதுகுறித்து இக்கட்சியி்ன் வட்ட செயலர் அ.வின்சென்ட் வியாழக்கிழமை கூறியது : மக்களுக்கு வெகுவாக பாதிப்பு ஏற்படுவதால் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதித்தது. இதே நிலைபாட்டை காரைக்கால் துறைமுகத்தின் மீதும் எடுக்கவேண்டுமென கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியே பிரதானமாக இருக்கிறது. உரிய விதிகளின்படி அவை ஸ்டாக் செய்வதும், இறக்குமதி, ஏற்றுமதி செய்வதும் கிடையாது. இதனால் சுற்றுவட்டார மக்கள் உடல் ரீதியாக பாதிக்கின்றனர். மலைபோல் குவிக்கப்பட்டுவரும் நிலக்கரி, உரிய முறையில் தண்ணீர் ஊற்றி, காற்றில் பரவாத வகையில் பாதுகாக்கப்படுவதில்லை. ஆங்காங்கே நிலக்கரி குவியலில் தீ கிளம்புகிறது. இப்பகுதி சுற்றுவட்டார மக்களின் ஆயுள் காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.