சிதம்பரம் கோயிலில் மலேசிய மாணவியர் நாட்டிய அஞ்சலி
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மலேசியாவைச் சேர்ந்த 65 மாணவியர்களின் நாட்டியஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மலேசியாவைச் சேர்ந்த 65 மாணவியர்களின் நாட்டியஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வியாழக்கிழமை மலேசியா நாட்டின் கோலாலம்பூரைச் சேர்ந்த விஷ்வ நிருத்யோதயா நாட்டிய அகாதெமியைச் சேர்ந்த மாணவியர்கள் ஷானுரேதாமணிவேலா, ஷரவேனாரவி, ஷர்மிளா சந்திரசேகரன், மிஷாலினிராணி, கலாமஞ்சரி, வைஷ்ணவி, ஹேமதர்ஷணி, ஜெயஸ்ரீ, ஐஸ்வர்யா உள்ளிட்ட 65 மாணவியர்களின் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டிய ஆசிரியர்கள் சிவலிங்கம், விஸ்வலட்சுமி, காந்திவீரன் ஆகியோர் உடன் வந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக மலேசியா நாட்டு மாணவியர்கள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி வீற்றிருக்கும் சித்சபை முன்பு நாட்டியமாடி, நாட்டியஞ்சலி செலுத்தினர்.
நடனக்கலை உருவாகிய சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயியில் ஸ்ரீநடாரஜப்பெருமானுக்கு முன்பு நாட்டியமாட வேண்டும் என மலேசியாவில் உள்ள நாட்டியப்பள்ளி மாணவியர்கள் நீண்ட நாளைய ஆசையாகும். அதனை முன்னிட்டு அனைவரும் ஒருங்கிணைத்து அழைத்து வந்து நடராஜர் கோயிலில் நாட்டிய அஞ்சலி செலுத்தியுள்ளோம். இது எங்களுக்கு மிகப்பெருமையை அளிக்கிறது என மலேசியாவிலிருந்து வந்த ஒருங்கிணைப்பாளர் மணிவேலன், தேன்மொழி தம்பதியினர் தெரிவித்தனர். நாட்டியமாடிய மாணவியர்களுக்கு ஸ்ரீநடராஜப் பெருமான் பிரசாதத்தை கோயில் பொது தீட்சிதர்கள் வழங்கினர். விழுப்புரத்தைச் சேர்ந்த அதிமுக நகரமன்ற உறுப்பினர் தங்கசேகர் மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...