92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.டெக் படிப்பு

இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் பி.டெக்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 5:42 am

ஜி.சுந்தரராஜன்

இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் பி.டெக்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியனிக்ஸ், பிசிகல் சயின்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். +2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்ற பின் ஜெஇஇ(மெயின்) 2013 தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: +2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும், ஜெஇஇ மெயின் தேர்வில்  60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைன் வழியாக மே 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய கல்வி நிறுவன இணையதளத்தை அணுகலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.