விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் மராமத்து பணியின் போது கரிமருந்து உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க் கிழமை நள்ளிரவில் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே உள்ள குந்தலப்பட்டிக்கும் - செங்குன்றாபுரத்துக்கும் இடையே கரிசல்காட்டு பகுதியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த 20-ம் தேதி அன்று மராமத்து பணிகள் நடந்தது. இதையொட்டி பட்டாசு தயார் செய்யப்படும் அறைகளின் தரைப்பகுதி கடப்பாறை கம்பியால் இடிக்கும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தரைப்பகுதியில் இருந்த கரிமருந்து உராய்வு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(32) மற்றும் சிவகாசி அண்ணா நகரைச் சேர்ந்த கருப்பசாமி(22) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகி்சசை அளிக்கப்பட்டது. அதையடுத்து, அவசரமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆமத்தூரைச் சேர்ந்த ஆலையின் உரிமையாளர் தங்கராஜ், அதே பகுதியைச் சேர்ந்த மேலாளர் சிவகுமார் ஆகியோர் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

