காட்டுமன்னார்கோவில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் ஆலய தேரோட்டம் கோலாகலம்
காட்டுமன்னார்கோயில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.


காட்டுமன்னார்கோயில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. தேரில் அதிகாலை 4.30 மணிக்கு ருக்குமணி சத்யபாமா சமேத ஶ்ரீராகோபாலன், ஶ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரகோபாலன் மற்றும் நாதமுனிகள் ஆகியோர் எழுந்தருளினர்.
பின்னர் தேர் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயில் வளாகத்தை அடைந்ததது. காட்டுமன்னார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கே.மணிகண்டன், பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர்.தாசன், ரவி, சொக்கலிங்கம், பாலசந்திரன், முத்துப்பாண்டி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏப்.28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெப்ப உற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடைகிறது. இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் ப.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...