தேசிய ஊரக உறுதி திட்ட தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் முன்பணமில்லா கண்ககுகளை தொடங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசியதாவது:
மத்திய மாநில அரசுகளின் மானியத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வங்கிகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதன் அடிப்படையில் அரசு திட்டத்தின் படி ஒவ்வொரு குடும்பத்திற்கும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு எண் தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும், இத்திட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தது போல் முன்பணமில்லா கணக்கு தொடங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும்.
மேலும், கோழிப்பண்ணை அமைப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், வேளாண் காப்பீடு செய்வதற்கும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதனால், வங்கியாளர்கள் இப்பணிக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும். இந்த மாவட்டத்தில் நெசவாளர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் தொழில் தொடங்குவதற்கு வேண்டிய கடனுதவியை அரசு அளிக்கும். அதையடுத்து, அரசு அறிவிக்கும் திட்டங்களில் மானியங்களை காலதாமதமின்றி பயனாளிகளுக்கு விரைவில் சென்றடைவதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் திட்டங்களை செயல்படுத்தி, அந்தந்த வங்கிகளுக்கான இலக்கை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் நேரடி கடன்களாகவும் ரூ.16.27 கோடி வழங்கி மாவட்ட அளவில் முதல் வங்கியாக தேர்வு செய்து விருது மற்றும் ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. அதேபோல், இரண்டாவதாக ராஜபாளையம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு ரூ.10 ஆயிரமும், 3-வதாக சாத்தூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் பிரபாகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் நெடுஞ்செழியன், பாண்டியன் கிராம வங்கியின் மேலாளர் ரமேஷ், ரிசர்வ் வங்கியின் அலுவலர் வீரன்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) முருகதாஸ், முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

