புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்: ஈரோட்டில் தொடங்கியது வாக்குப்பதிவு

இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே துறையில் உள்ள தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ரயில்வே ரயில்வேயில் டிஆர்இயு, எஸ்.ஆர்.எம்.யு, பிஎம்.எஸ்,எஸ்.ஆர்.இ.எப். உள்பட 8 சங்கங்கள்

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 11:54 am

ஜபலின் ஜான்

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஈரோட்டில் வியாழக்கிழமை தொடங்கியது.
 இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே துறையில் உள்ள தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ரயில்வே ரயில்வேயில் டிஆர்இயு, எஸ்.ஆர்.எம்.யு, பிஎம்.எஸ்,எஸ்.ஆர்.இ.எப். உள்பட 8 சங்கங்கள் போட்டியிடுகின்றன.
 இதற்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்கள் தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
 தெற்கு ரயில்வேயில் மட்டும் இத்தேர்தலில் 86,140 பேர் வாக்களிக்கின்றனர். ஈரோட்டில் மட்டும் 3,408 பேர் வாக்களிக்கவுள்ளனர். குரூப் சி., டி பிரிவு ஊழியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
 பதிவாகும் மொத்த வாக்குகளில் 30 சதவீதம் பெறும் தொழிற்சங்கம் மட்டுமே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்படும். இதுபோல அங்கீகரிக்கப்படும் தொழிற்சங்கம் மட்டும்தான் ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்.
 இந்தியாவிலேயே முதல்முறையாக 2007-ல் தான் ரயில்வேத்துறையில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. இப்போது நடப்பது 2-வது தேர்தல். இதில் வெற்றி பெறும் தொழிற்சங்கங்களுக்கு 6 ஆண்டுகள் அங்கீகாரம் வழங்கப்படும்.
 ஈரோட்டில் ஏரியா அலுவலர் ரதிப்பிரியா தலைமையிலான அதிகாரிகள் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.