யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மனைவியை அடித்து மிரட்டிய சிவகாசி கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

தனது இளம் மனைவியை கல்லால் அடித்து, மிரட்டியதாக சிவகாசி கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 2:28 am

கோ.ஜெயக்குமார்

தனது இளம் மனைவியை கல்லால் அடித்து, மிரட்டியதாக சிவகாசி கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, தைலாபுரம், மறவர் காலனியைச் சேர்ந்தவர் கோப்பெருந்தேவி (30). இவர் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிவகாசியில் ஆசிரியப் பயிற்றுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் தைலாபுரம் முத்தையா மகன் மூவேந்தன் என்பவருக்கும் 2.9.2007-ல் திருமணம் நடைபெற்றுள்ளது. மூவேந்தன், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நான்கரை வயதில் பெண் குழந்தை உண்டு.

கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் மூவேந்தன் தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து கோப்பெருந்தேவி, திருப்பரங்குன்றம், பாலாஜி நகரில் உள்ள கணவர் மூவேந்தன் வீட்டிற்கு 10.4.13ல் சென்று குழந்தையின் பராமரிப்பு சம்பந்தமாகப் பேசச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மூவேந்தன், கோப்பெருந்தேவியை ஆபாசமாகப் பேசி, கல்லால் அடித்தாராம். இதில் கோப்பெருந்தேவி காயம் அடைந்தார்.

இது குறித்து கோப்பெருந்தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பேராசிரியர் மூவேந்தனை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.