தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் இயங்கும் மழலையர் பள்ளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில்

Updated On :27 ஏப்ரல் 2013, 9:22 am

கடலூர் மாவட்டத்தில் கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் இயங்கும் மழலையர் பள்ளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 43 மழலையர் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

இப்பள்ளிகளில், கட்டாய கல்விச்சட்டம் வகுத்துள்ள விதிமுறைப்படி போதிய வசதிகள் இல்லாததும், அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்காமல் இயங்குவதும் தெரியவந்துள்ளது. எனவே வரும் ஜூன் மாதம் 1-ம் தேதிக்குள் போதிய கட்டமைப்பு வசதிகளை செய்து அங்கீகாரம் பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அங்கீகாரம் பெறத்தவறினால் பள்ளிகள் மூடி சீல் வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.