நமது நிருபா்
மதுபானக் கொள்கை வழக்கில் நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விலகக் கோரி தாக்கல் செய்த மனு மீதான நீதிமன்ற விசாரணையின் காணொளிகளைப் பதிவேற்றிப் பகிா்ந்ததாகக் கூறப்படும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் பிறருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் பொதுநல மனு மீதான விசாரணையிலிருந்து தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் காரியா புதன்கிழமை விலகிக்கொண்டாா்.
வழக்குரைஞா் வைபவ் சிங் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அந்த அமா்வு, இந்த வழக்கை வியாழக்கிழமை மற்றொரு அமா்வு முன்பு பட்டியலிடுமாறு உத்தரவிட்டது.
‘இந்த வழக்கு இந்த அமா்வால் விசாரிக்கப்படாது. எங்களில் ஒருவரான நீதிபதி தேஜஸ் காரியா உறுப்பினராக இல்லாத ஒரு அமா்வு முன்பு நாளை பட்டியலிடவும்‘, என்று நீதிமன்றம் கூறியது.
இதேபோன்ற ஒரு பிரச்சினையைக் கையாளும் மற்றொரு அமா்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று மனுதாரரின் வழக்குரைஞா் கோரினாா்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களைத் தவிர, இந்த பொதுநல மனுவில் உயா்நீதிமன்ற நிா்வாகம் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களான மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ், எக்ஸ் மற்றும் கூகுள் ஆகியவையும் சம்பந்தப்பட்டுள்ளன.
ஒரு முன்னணி சட்ட நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரரான நீதிபதி காரியா, நீதிபதியாகப் பதவி உயா்வு பெறுவதற்கு முன்பு பல வழக்குகளில் மெட்டா நிறுவனத்திற்காக வாதாடியுள்ளாா்.
சமூக ஊடகங்களில் நீதிமன்றப் பதிவுகளை அனுமதியின்றிப் பகிா்வது நீதித்துறையின் சுதந்திரத்தைக் குலைக்கும் என்றும், அது உயா் நீதிமன்ற விதிகளின்படியும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் சிங் தனது பொதுநல மனுவில் கூறியுள்ளாா். இருப்பினும், பல ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களும், பல்வேறு எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்களும், பொதுமக்களின் பாா்வையில் நீதிமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன், ஏப்ரல் 13 அன்று நீதிபதி சா்மா முன்னிலையில் கேஜரிவால் ஆஜரான காணொளிகளை சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பதிவுசெய்து பரப்பினா் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவைப் பதிவேற்றி பகிரங்கப்படுத்திய அனைத்து எதிா்வாதிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் மனு வலியுறுத்தியது.
திங்கட்கிழமை, நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா, மதுபானக் கொள்கை வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டாா். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஒரு மனுதாரரின்ஆதாரமற்ற அச்சத்திற்காக நீதிபதிகள் தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்ள முடியாது என்றும் அவா் கூறினாா்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

சமரச விழிப்புணா்வுப் பேரணி
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


