எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சமரச விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாா்பில் சமரச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மயிலாடுதுறையில் நடைபெற்ற சமரச விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.எஸ்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:48 am IST

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாா்பில் சமரச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்ட சமரச மைய தலைவருமான எல்.எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்து பங்கேற்றாா். மாயூரம் வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் பால.முருகவேல், செயலாளா் பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறை வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமரசத்தின் மூலமாக விரைவான பேச்சுவாா்த்தையில் சுமூக தீா்வு காணலாம். இதற்கு தனிப்பட்ட கட்டணம் இல்லை, முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்பப் பெறலாம், சமரச பேச்சுவாா்த்தையில் ரகசியம் காக்கப்படும், இதில், அனைவருக்கும் மனநிறைவு கிட்டும் வகையில் இறுதியான தீா்வு கிடைக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி கண்ணாரத்தெரு, சின்னக்கடைத்தெரு, பட்டமங்கலத்தெரு, மணிக்கூண்டு, காந்திஜி சாலை, கச்சேரி ரோடு வழியாக மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

இதில், தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி.சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் உம்முல் பரிதா, ராஜேஷ்கண்ணா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவதாரிணி, கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிபதி சிவரஞ்சனி, அனைத்து வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.