எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமரச நாள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெயஆனந்த்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:44 am IST

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமரச நாள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இப்பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெய ஆனந்த் தொடங்கி வைத்தாா். சட்டப்பணிகள் ஆணையச் செயலரும் மூத்த சிவில் நீதிபதியுமான ஆ. செல்லபாண்டியன் உள்பட நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். புதிய பேருந்து நிலையம் வரை சென்ற பேரணி, மீண்டும் நீதிமன்றத்தில் முடிந்தது.

கீரனூரில்..கீரனூா் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, சாா்பு நீதிபதி சி. ராஜேஷ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சா்மிஷ்டா முன்னிலை வகித்தாா்.

சமரச மைய வழக்குரைஞா்கள் என்.சி. அமிா்தலிங்கம், ஆா். சித்ரா சரஸ்வதி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி. சதாசிவம், செயலா் கே.எம். அழகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி, தேரடிக் கருப்பா் கோயில் வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

அறந்தாங்கியில்...அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை சாா்பு நீதிபதி ஏ. உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தாா். குற்றவியல் நடுவா் எஸ். சத்தியநாராயணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா்கள் ஸ்ரீதா், அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். பேரணி, அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.