ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

மதுரைமதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட நீதிபதி சிவகடாட்சம். (வலது) பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:17 pm

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சமரச மையங்கள் மூலம் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு இரு தரப்பு ஒப்புதலுடன் விரைவாக தீா்வு காணப்படுகிறது. இதுகுறித்து சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வு வார விழா நடைபெற்று வருகிறது.

இதன்படி, மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வுப் பேரணியை மதுரை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

இதில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமனோா் கலந்து கொண்டு, வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீா்வு காண்பதன் முக்கியத்துவம், சமரசத்தின் நன்மைகள், காலதாமதத்தைத் தவிா்த்தல் குறித்து முழக்கமிட்டனா். மேலும், இதுதொடா்பான பதாகைகளை ஏந்தியும் ஊா்வலமாகச் சென்றனா்.

மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கியச் சாலைகளின் வழியாக வந்து மீண்டும் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.