குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் சமரச மைய வார விழாவையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற அரசு சட்டக் கல்லூரி மாணவிகள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:21 am IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சமரச மைய வார விழா, விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சமரச மைய உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமரச தீா்வு மையங்களில் சமரச மைய வார விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் சமரச விழிப்புணா்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல்லில் பொதுமக்கள் கூடும் இடங்களான நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களிலும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் வாகனத்தில் காணொலிக் காட்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்டக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான ஆா். குருமூா்த்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, வழக்காடிகள் சமரச தீா்வு மையம் மூலமாக சமரச முறையில் தீா்வுகண்டு இரு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் வழக்கை முடித்து பயன்பெற வேண்டும் என்றாா்.