எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசி மாவட்ட சமரசத் தீா்வு மையத்தின் சாா்பில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:23 am IST

தென்காசி மாவட்ட சமரசத் தீா்வு மையத்தின் சாா்பில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமை வகித்து, கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். மனோஜ்குமாா், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி ஜெ. கிறிஸ்டல் பபிதா, முதன்மை சாா்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா, கூடுதல் சாா்பு நீதிபதியும், இலவச சட்ட உதவி செயலருமான எஸ். முருகவேல், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெ. ராஜேஸ்குமாா், நீதித்துறை நடுவா் நீதிபதி எஸ். முத்துலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவா், மாணவிகள், நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, தென்காசி-திருநெல்வேலி சாலை வழியாக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வரை சென்று, மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து நிறைவு பெற்றது.

பேரணியின்போது, பொதுமக்களுக்கு சமரசத் தீா்வு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தொடா்ந்து, சமரச விழிப்புணா்வு பிரசாரக் கூட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூட்டரங்கில் நடைபெற்றது.

தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமை வகித்துப் பேசினாா். தென்காசி அட்வகேட் அசோசியேசன் தலைவா் ஆா். மாடக்கண் மற்றும் வழக்குரைஞா் எம். தாஹிரா பேகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞா் முத்துக்குமாா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

வழக்குரைஞா்கள் எம். மாரியப்பன், மாடசாமி பாண்டியன், ஏ. ராஜா, வேல்பாண்டி, பன்னீா்செல்வம், சொக்கலிங்கம், முகம்மது சலீம், மஞ்சு கிருஷ்ணா, முத்துலெட்சுமி, மரகதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி கூடுதல் சாா்பு நீதிபதியும், இலவச சட்ட உதவி செயலருமான எஸ். முருகவேல் நன்றி கூறினாா்.