கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சட்டப் பேரவை தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரமருக்கு 6 ஆயிரம் அஞ்சல் அட்டை

தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து 6 ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டுள்ளது.

Updated On :28 ஏப்ரல் 2013, 5:39 am

தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து 6 ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சட்டப் பேரவையில் தனி ஈழம் அமைய வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் வைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.இந்த கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, வத்திராயிருப்பில் உள்ள தங்கதாரகை தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு சேவை மையம் சார்பில் 6 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் பா.மணிமாறன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.