வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு காதுகேளாத சிறுவன் சாவு
சிதம்பரம் அருகே வாரனாசி-ராமேஸ்வரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு காதுகேளாத சிறுவன் இறந்தார்.


சிதம்பரம் அருகே வாரனாசி-ராமேஸ்வரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு காதுகேளாத சிறுவன் இறந்தார்.
சிதம்பரம் அருகே கதிர்வேலு நகரைச் சேர்ந்த துரைசிங் மகன் ராஜ்சிங் (14). காதுகேளாத, வாய் பேச முடியாத இச்சிறுவன் சிதம்பரம் காதுகேளாதோர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். சிறுவன் ராஜ்சிங் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அருகே மீதிகுடி ரயில்பாதையில் நடந்து சென்ற போது மாலை 3.45 மணி்க்கு வந்த வாரனாசி-ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனிப்பிரிவு காவலர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...