தனியார் பேருந்து மோதியதில் விவசாயி பலி
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விவசாயி பலியானார்.


பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விவசாயி பலியானார்.
நெல்லிக்குப்பம் அடுத்துள்ள விலங்கள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமரவேல் (40). இவர் இரு தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றுவிட்டு, வியாழக்கிழமை காலை வேலூர் பேருந்தில் இருந்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் வந்திறங்கினர். அங்கிருந்து விலங்கள்பட்டு பேருந்து ஏற சென்றவர் தடுக்கிக் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று குமரவேல் மீது ஏறியது. இதில் அதே இடத்தில் குமரவேல் உயிரிழந்தார்.
இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...