கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனர்கள் 65 பேரை விடுவிக்கக் கோரி போராட்டம்

கடலில் மீன் பிடிக்க சென்ற நாகை,காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 65 பேர் கடந்த செவ்வாய் கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2013, 10:55 am

சங்கர்

கடலில் மீன் பிடிக்க சென்ற நாகை,காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 65 பேர் கடந்த செவ்வாய் கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாகை வட்ட மீனவர்கள் கடந்த வியாழன் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை,காரைகால் மாவட்ட மீனவர் பஞ்சாயத்தார்கள் ஆலோசனை கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. இதில் 52 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்கள் மற்றும் 9 விசை படகுகளையும் வரும் 7ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும்.இல்லையெனில் வரும் 10ம் தேதி நாகை,காரைகால் மாவட்ட மீனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. படகுகளில் கருப்புக் கொடி கட்டி கடற்கரையில் பெண்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது. இலங்கை கடற்படையினர் அடிக்கடி நாகை,காரைகால் மீனர்களை தாக்குவதை தடுக்ககோரி தமிழக முதல்வரை மீனவர் பஞ்சயத்தார்கள் சந்திப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.