பண்ருட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் : போலீஸ் தடியடி
பண்ருட்டி புதுப்பேட்டை காவல்நிலையத்தை கண்டித்து காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் விரட்டினர்.


பண்ருட்டி புதுப்பேட்டை காவல்நிலையத்தை கண்டித்து காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் விரட்டினர்.
பண்ருட்டி வட்டம் கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (55). இவர் நேற்று ஏ.பி. குப்பத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கடப்பாறையை மண்ணில் குத்திய போது அருகில் சென்ற மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசார் வழக்கை மாற்றி பதிவு செய்வதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இறந்த சுப்ரமணியத்தின் உறவினர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, பண்ருட்டி ஆய்வாளர் சிவசுப்பு உள்ளிட்ட போலீசார், சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சி பலனளிக்காததைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர்.
மறியலில் ஈடுபட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தும் போது, புதுப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் வி. பாலு என்பவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...