தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரத்தில் மீண்டும் யானை கூட்டம் படையெடுப்பு

மீண்டும் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் பகுதிக்கு இந்த யானை கூட்டம் வந்தன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2013, 6:12 am

ச.​ கார்த்​தி​கே​யன்

சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து உணவு, குடிநீரை தேடி ஒரு குட்டி யானை உள்பட ஆறு யானைகள் விழுப்புரம், கள்வராயன் மலை அடிவாரத்திற்கு கடந்த 1ம் தேதி வந்தன.

இதையடுத்து சென்ற 8ம் தேதி சங்கராபுரம் பகுதிக்கு வந்த இந்த யானை கூட்டம் தொடர்ந்து 4 நாட்களாக அப்பகுதியில் விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தின. பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் படையெடுத்ததால் போக்குவரத்து முடங்கி போனது. இந்நிலையில் சென்ற ஞாயிற்றுகிழமை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தன.

மீண்டும் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ரிஷிவந்தியம் பகுதிக்கு இந்த யானை கூட்டம் வந்தன. வழக்கம்போல் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை துவம்சம் செய்து வருகின்றன. இதனையடுத்து யானைக் கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வன மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.