பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தாக்கியதில் காயமடைந்தவருடன், போலீஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து புகார் மனு வாபஸ் பெறப்பட்டது.
பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த சேகர் என்பவர் குடும்ப பிரச்னை தொடர்பாக அவரது மருமகன் கோடங்கிபட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு வராமல் பிரபு காலதாமதம் செய்து வந்ததாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை பிரபுவின் அண்ணன் ரவி(46) என்பவரை காவல் சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ்பிரபு காவல் நிலைத்துக்கு அழைத்து வந்து விசாரித்தாராம். அப்போது சார்பு ஆய்வாளர் தாக்கியதில் ரவிக்கு கை உடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவியிடம், போலீஸார் சரமச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, காவல் நிலையத்தில் சேகர் அளித்திருந்த புகார் தொடர்பான பிரச்னை குறித்து, இரு தரப்பினரும் உறவினர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்வு ஏற்படுத்திக் கொள்வதாக முடிவு செய்து, புகார் மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. ரவி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

