ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக திருமாவளவன் மீது பெண் புகார்

நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம்.அதன் பின்னர் ஒரு

News image
Updated On :24 ஆகஸ்ட் 2013, 11:11 am

வேல்முருகன்

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த கவிதா என்ற பெண் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம்.அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக தில்லி சென்ற போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.